குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் காட்டாற்று வெள்ளம்.

by Editor / 12-12-2024 11:49:59pm
குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் காட்டாற்று வெள்ளம்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை - குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் காட்டாற்று வெள்ளம்.


தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், 15 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

 இந்த நிலையில், கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

 குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அருவிக்கரை ஓரமாக யாரும் செல்ல வேண்டாம் எனவும், ஆற்று படுகைகள், நீர் நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் காட்டாற்று வெள்ளம்.

Share via