நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்கள் படை சூழ ஆஜரான ராக்கெட் ராஜா.

by Editor / 13-06-2024 06:33:55pm
நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்கள் படை சூழ ஆஜரான ராக்கெட் ராஜா.

தென்காசி மாவட்டம் சுரண்டை காவலரை தாக்கிய வழக்கில், பங்களா சுரண்டையை சேர்ந்த கோழி அருள் உட்பட இருவர் மீது  கடந்த 2009ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கோழி அருளை போலீசார்  காவலில் எடுத்து விசாரித்த போது தான் ராக்கெட் ராஜாவுடன் இருப்பதாக கூறினார். இத்தகவலின்  பேரில்  போலீசார்  20‌09-ஆம் ஆண்டு ராக்கெட் ராஜா வீட்டில் நடத்திய சோதனையில், அங்கு ராக்கெட் லாஞ்சரும்‌‌, ஏ.கே.47 ‌‌ரக‌ துப்பாக்கிகளுக்‌கு பயன்படுத்தக் கூடிய தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.அவருடைய வீட்டில் ஆயுதங்கள்  பதுக்கி வைத்திருந்ததையடுத்து  அவர் மீது ஆயுத பதுக்கல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கில் ஆஜராக பனங்காட்டுப்படை கட்சியின் மாநிலத் நிறுவனர்  ராக்கெட் ராஜா ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தவல்லி முன்னிலையில் ஆஜரானார்.இந்த வழக்கு சம்பந்தமாக வரும் ஜூலை 15 ஆம் தேதி தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

 

Tags : நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்கள் படை சூழ ஆஜரானராக்கெட் ராஜா.

Share via