ஆசிரியர்களை கல்லூரிக்கு வர  கட்டாயப்படுத்தக் கூடாது  தமிழக அரசு உத்தரவு

by Editor / 28-04-2021 04:24:16pm
ஆசிரியர்களை கல்லூரிக்கு வர  கட்டாயப்படுத்தக் கூடாது  தமிழக அரசு  உத்தரவு

 

கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் கல்லூரி ஆசிரியர்களை கல்லூரிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்லூரிகள் இணை இயக்குநர் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா காலத்தில் கல்லூரி வகுப்புகளை இணையவழியாக வீட்டிலிருந்தவாறு மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் சில கல்லூரிகளில் இணையவழியாக வகுப்புகளை எடுக்கவும் மற்றும் இதர கல்லூரி சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும் ஆசிரியர்களை கல்லூரிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்ற நிர்பந்திப்பதாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது.
எனவே, கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில் கல்லூரி ஆசிரியர்களை எக்காரணத்தைக் கொண்டும் கல்லூரிக்கு நேரில் வருகைப்புரிய நிர்பந்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் கல்லூரி வகுப்புகளை இணையவழியாக வீட்டிலிருந்தவாறு மட்டுமே ஆசிரியர்கள் நடத்தப்பட வேண்டும். அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories