கலைஞர் நினைவிடத்தில் தூய்மை பணியாளர்கள் 200 பேர் அனுமதி இன்றி போராட்டம் நடத்தி கைதாகி உள்ளனர்.
சென்னை அண்ணா சமாதியின் உள்ளே இருக்கும் கலைஞர் நினைவிடத்தில் தூய்மை பணியாளர்கள் 200 பேர் அனுமதி இன்றி போராட்டம் நடத்தி கைதாகி உள்ளனர். பார்வையாளர்களை போல் சென்று பைகளில் மடித்து வைத்திருந்த பதா கைகளை எடுத்து திடுமென்று திரு.வி,க நகர், ராயப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 200 தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் ,ஊதிய உயர்வு மற்றும் தனியார் மையத்தை எதிர்த்து அனுமதி என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் பல மாதங்களாக நடந்து வரும் போராட்டத்தில் ஒரு பகுதியாகும். இதில் தூய்மை பணியாளர்கள் நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் தனியார் மயமாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பணியாளர்கள், குறிப்பாக அம்பத்தூர் மண்டலத்தை சேர்ந்தவர்கள். பல மதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .அரசாங்கம் தங்களுடைய கோரிக்கையை செவிசாய்க்கவில்லை என்று பிற துறைகளில் பணியில் நடந்த செய்யப்பட்டது போல தங்களுக்கும் உதவவில்லை என்றும் அவர்கள் குற்றம் காட்டி உள்ளனர்..தலைமைச்செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற போதுபோது போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டம் தீவிரமடையும் என்றும் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் ஆணையர் வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடைபெறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
Tags :


















