சென்னை விமானநிலையத்திலிருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்ட விஜய்.

தவெக தலைவர் விஜய், நீலாங்கரை இல்லத்தில் இருந்து சென்னை விமானநிலையம் வழியாக தனி விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டுள்ளார். இந்த சுற்றுப் பயணத்தின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரச்சனைகளையும், முக்கிய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களையும் பட்டியலிட்டு வெளிச்சம் போட்டுக் காட்டுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரச்சாரத்தில் திமுக அரசு குறித்து கடுமையான விமர்சனங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : சென்னை விமானநிலையத்திலிருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்ட விஜய்.