மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை.

தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், ஒரு சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவாகி வருகிறது. அதன் எதிரொலியாகவும், பருவ மழை தொடங்கியுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு துரிதமாக சிகிச்சை அளிக்கும் வகையில் டெங்கு சிகிச்சை சிறப்பு வார்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3பேருக்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து மழையின் தாக்கமும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இதனிடையே பருவநிலை மாற்றத்தால் 67 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 26 சிறுவர்கள், 33 பெரியவர்களும் சிகிச்சை என 59 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 3பேர் வைரஸ்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலர் காய்ச்சல் கண்டறியப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் டெங்குகாய்ச்சல் பாதிப்புடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஸசிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நிலைய மருத்துவ அலுவலர் கூறும்போது : தற்போது மழைக்காலம் என்பதால் சளி காய்ச்சல் பாதிக்கப்பட்டு தினமும் 65 முதல் 70 பேர் வருகின்றனர். அதே நேரம் டெங்கு காய்ச்சல் குறித்தும் கண்காணித்து வருகிறோம். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.வரும் நாட்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்"எனத் தெரிவித்தார்.
Tags : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை