குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12 1 2024 அன்று வெளியிடப்படுகிறது-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12 1 2024 அன்று வெளியிடப்படுகிறது
இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2 தேர்வு முடிவுகளை வழி விடுவதில் காலதாமதம் உள்ளதாக குறிப்பிட்டு வெளியான செய்திகள் குறித்து பின்வரும் விவரங்களை தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன 15 12 2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டு திட்டம் 2023 ஆம் ஆண்டில் 15 3 2023 அன்று மேம்படுத்தப்பட்டு தேர்வாணைய இணையத்தில் வெளியிடப்பட்டது. தேர்வாணைய ஆண்டு திட்டத்தின் படி 2023 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் 14 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளில் 20 லட்சம் தேவர்கள் தோராயமாக கலந்து கொண்டுள்ளனர் தேர்வாணைய ஆண்டு திட்டத்தின் படி தேர்வுகள் நடத்தப்பட்டதோடு 32 தேர்வுகளுக்கான நலப் பாண்டியில் அறிவிக்கப்பட்ட 9 தேர்வுகள் உட்பட தேர்வு முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட முடிவுகளின் படி தோராயமாக 12, 500 தேர்வர்கள் பல்வேறு அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பினை இந்த ஆண்டு பெற்றுள்ளனர் தொகுதி ஒன்று முதன்மை எழுத்து தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வுகளின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் . மேலும் ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகள் நடத்த வேண்டியிருந்தாலும் தொகுதி 2 முதன்மை எழுத்து தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023 இல் வெளியிடப்படுவதாக ஏற்கனவே தற்காலிக தெரிவு முடிவு அட்டவணை குறித்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகளை விரைந்து வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொகுதி 2 முதன்மை எழுத்து தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக விடுமுறை நாட்கள் உட்பட நடைபெற்று வருகிறது ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சவால்கள் இருந்த போதிலும் தொகுதி இரண்டு தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதியில் வெளியிடப்படும் எனவே விண்ணப்பதாரர்கள் தொகுதி 2 தேர்வு தொடர்பான பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Tags :