மோடியுடன் ரஷ்ய அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை

by Staff / 01-04-2022 03:03:19pm
மோடியுடன் ரஷ்ய  அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை

டெல்லி வந்துள்ள ரஷ்ய அமைச்சர்இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளார்.

உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகளிலும் இருந்து பொருளாதார தடைகளை எதிர்கொள்ள ரஷ்யா இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் ரூபாய்  ரூபிள் பரிவர்த்தனை அதிகப்படுத்தவும் விரும்புகிறது.

இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அமைச்சர்  இரண்டு நாள்  சுற்று பயணமாக நேற்று இரவு டெல்லி வந்துள்ளார்.

விமான நிலையத்தில் அவரை வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர் லண்டனில் லாவ் ரோபின் வளர்ப்பு மகளுக்கு  சொந்தமான 4 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை அண்மையில் இங்கிலாந்து அரசு முடக்கியுள்ளது.

இத்தகைய சூழலில் நட்பு நாடுகளிடம் வர்த்தக பலன்களை எதிர்பார்த்து  ரஷ்ய அமைச்சரின் சீனாவுக்கு அடுத்து இந்திய வந்துள்ளார்.

இன்று பிரதமர் மோடி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச அவர் திட்டமிட்டுள்ளார் உக்ரேனுக்கு  எதிராகப் போர் தொடுத்து தொடர்பான காரணங்களையும் அவர் விவரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவிடமிருந்து வாங்கும் ராணுவ தளவாடங்கள் எஸ்-400 ஏவுகணை அமைப்பின் பாகங்கள் போன்றவற்றை விரைவில் டெலிவரி செய்வது தொடர்பாகவும் ரஷ்ய அமைச்சரிடம் இந்திய தரப்பில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Tags :

Share via

More stories