ஆட்சியை விட்டு இறங்குங்கள் ஆளுமை உள்ளவர் அந்த ஆட்சி முதல்வர் நாற்காலியில் அமரட்டும்-நல்லசாமி
தென்காசி மாவட்டம் பிரானுர் பார்டரிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று தமிழ்நாடு கள் இயக்கத்தினுடைய கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்காலை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் கள்லுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும் என்றுஅறிவிக்க வேண்டும், 2024 நாடாளுமன்ற தேர்தல் செய்தியை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளிவர வேண்டும். தவறினால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்.கள் தடையை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது உலகளாவிய நடைமுறைக்கு மாறானது இவை இரண்டுமே புரிதலின்மையும் வெளிப்பாடு ஆகும் கல் விற்பனைக்கு வந்தால் கலப்படம் வந்து விடும் என்று கூறுகிறார்கள் தமிழ்நாடு அரசு ஆளுமை இல்லாத அரசா ஆளுமை இல்லாமல் போனால் ஏன் ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும் நீங்கள் ஆட்சியை விட்டு இறங்குங்கள் ஆளுமை உள்ளவர் அந்த ஆட்சிஅமரட்டும் முதல்வர் நாற்காலியில் அமரட்டும் இதற்கு என்ன பதில் திமுக கூட்டணி தலைமையிலான வேட்பாளர்கள் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்கள். 2009 இல் இருந்து இதுவரை 15 ஆண்டுகள் நடந்துவரும் இந்த போராட்டம் ஜனவரி மாதம் 2024 இல் முடியும். என்றார்.
Tags : ஆளுமை உள்ளவர் அந்த ஆட்சி முதல்வர் நாற்காலியில் அமரட்டும்-நல்லசாமி