14 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் போக்சோவில் 50 வயது நர்சரி உரிமையாளர்.கைது

by Editor / 07-10-2022 07:49:00am
14 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் போக்சோவில் 50 வயது  நர்சரி உரிமையாளர்.கைது

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 50). நர்சரி உரிமையாளர். இவர் வீட்டின் அருகில் வசிக்கும் தம்பதியினருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி மாணவி உள்ளார்.

மாணவியை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்ல தம்பதியினருக்கு நேரம் கிடைக்காத சமயங்களில் சேகர் அந்த மாணவியை காரில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்வதாக மாணவியை சேகர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் பள்ளி மாணவியின் உடல் நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதில் பள்ளி மாணவி 8 மாதமாக கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்இதுகுறித்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையில் சேகர் மாணவிக்கு 2 வருடங்களுக்கும் மேலாக பாலியல் தொந்தரவு கொடுத்ததும், இதுகுறித்து வெளியில் எதுவும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்து போன மாணவி யாரிடமும் இது குறித்து எதுவும் சொல்லாதது தெரிய வந்தது.

இது தொடர்ந்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo