பா. ஜ. க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ராஜினாமா.....

by Admin / 24-08-2021 04:36:48pm
பா. ஜ. க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ராஜினாமா.....

சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து மாநில பா. ஜ. க பொதுச்செயலாளரும் வழக்கறிஞருமான கே. டி ராகவன் தம் பதவியை ராஜினாமா செய்வதாக தம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்..... 
           "தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யார் என்று தெரியும்... என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி ஒரு வீடியோ வந்ததை அறிந்தேன் என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன் தர்மம் வெல்லும். " என்று தம் ட்விட்டர் பக்கத்தில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் கே. டி  ராகவன்
            ஒரு பெண்ணிடம் வீடியோ காலில் பாலியல் ரீதியாகப் பேசியதாக பத்திரிக்கையாளர் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கே. டி. ராகவன் தம் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via