அம்பானி குடும்பத்தினருக்கு z + பாதுகாப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் குடும்ப உறுப்பினர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இசட் பிளஸ் [z ..+]பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பாதுகாப்புக்கான செலவை அவர்களே ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அம்பானிகள் நம் நாட்டில் இருக்கும்போது பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் கூறியுள்ளன. அவர்கள் வெளிநாடு செல்லும்போது பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Tags :