தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 23 அன்று வெளியிடப்படும் -அர்ச்சனா பட்நாயக்
சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 23 அன்று வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுள்ளார். இறுதிப்பட்டியல் ,பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .தற்போது இதற்குப் பிறகு 23 ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் கண்டறியப்பட்ட தர்க்கரீதியான முரண்பாடுகளை சரி செய்யும் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கமளிக்க பத்து நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முரண்பாடுகள் உள்ள வாக்காளர்களின் பட்டியல்கள் கிராம ஊராட்சி அலுவலகங்கள் ,தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகரப்புற வாழை அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன ,வரவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது சுமார் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர், இதில் ஆண்கள் 2. 66 கோடி பெண்கள் 2.77 கோடி என தெரிய வந்துள்ளது.
Tags :



















