செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நிகழ்வை இந்தியா நடத்துவதற்கு மிகவும் தகுதியான நாடு- ஐநா பொதுச் செயலாளர்
டெல்லியில் பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 14 முதல் 20 வரை குளோபல் சவுத் நாடுகளில் முதல் எ இ மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த தலைவர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இம்மாநாடு குறித்து செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நிகழ்வை இந்தியா நடத்துவதற்கு மிகவும் தகுதியான நாடு என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோகுட்டரஸ் பாராட்டியுள்ளார். இந்தியா மிகவும் வெற்றிகரமான வளர்ந்து வரும் பொருளாதாரத்தை உடைய நாடு என்றும் இத்தகைய முக்கிய சர்வதேச விவாதங்களை நடத்த இந்தியா சரியான இடம் என்றும் புகழ்ந்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒரு சில வல்லரசு நாடுகளின் கைகளில் மட்டும் இருக்கக் கூடாது என்றும் அது உலகங்களையும் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி கூறியுள்ளார்.
Tags :



















