பிரம்மபுத்திரா நதிக்கு அடியில் இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் சாலை மற்றும் ரயில் சுரங்கப்பாதை
அசாமில் பிரம்மபுத்திரா நதிக்கு அடியில் இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் சாலை மற்றும் ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த சுரங்கப் பாதை அசாமின் கோபூர் மற்றும் நுமலிகர் ஆகிய இடங்களை இணைக்கிறது. 18, 662 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது இந்த இரு இடங்களுக்கு இடையே உள்ள தூரம் 240 கிலோமீட்டர் சுரங்கப்பாதை அமைப்பதின் மூலம் 34 km ஆக இது குறையும். இதன் மூலம் ஆறு மணி நேரம் பயணம் வெறும் முப்பது நிமிடங்களாக குறையும். மொத்தம் 33.7 கிலோமீட்டர் நீளமுள்ள பசுமை வழிச்சாலையில் நதிக்கு அடியில் செல்லும் சுரங்கப்பாதையின் நீளம் 15 .79 கிலோமீட்டர் இது இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது இரட்டைக் குழாய் சாலை மற்றும் ரயில் சுரங்கப்பாதை ஆகும். இது வடகிழக்கு மாநிலங்களின் இணைப்பை மேம்படுத்துவதோடு தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ போக்குவரத்திற்கும் உறுதுணை புரியும்.
Tags :



.jpg)















