ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை- மத்திய அரசு

பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 75 மைக்ரான் அளவுக்கு மேல் இருக்க வேண்டியது செப்டம்பர் 30-ம் தேதி முதல் கட்டாயம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளின் தடிமனுக்கான அளவு 120 மைக்ரானாக உயர்த்தப்படுகிறது.
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை தமிழகத்தில் ஏற்கெனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :