உலகளாவிய அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம்

by Staff / 09-11-2023 12:58:37pm
உலகளாவிய அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம்

உலகளாவிய அணு ஆயுத சோதனை தடைக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்ததை ரத்து செய்யும் மசோதாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளார். இது CTBT எனப்படும் விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் ஒப்புதலை ரத்து செய்கிறது. அணு ஆயுத சோதனை தடையில் கையெழுத்திட்ட, ஆனால் ஒப்புதல் அளிக்காத அமெரிக்காவின் இது தொடர்பான நிலைப்பாட்டையே இதுவும் பிரதிபலிக்கிறது. 1996 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட CTBT ஆனது, உலகில் மேற்கொள்ளப்படும் அனைத்து அணு ஆயுத வெடிப்பு சோதனைகளையும் தடை செய்கிறது, ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

 

Tags :

Share via