உத்தரகண்ட் நிலச்சரிவிலிருந்து மயிரிழையில் தப்பிய பேருந்து பயணிகள் குதித்து தப்பினர் 

by Editor / 21-08-2021 08:40:25pm
உத்தரகண்ட் நிலச்சரிவிலிருந்து மயிரிழையில் தப்பிய பேருந்து பயணிகள் குதித்து தப்பினர் 

 

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவிலிருந்து பேருந்து ஒன்று அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது. 
 உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள வடகிழக்கு பகுதியான நைனிடாலிலிருந்து பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. அப்போது 14 பயணிகளுடன் சென்ற அந்த பேருந்து மலைப்பாங்கான பகுதி வழியாக சென்றுள்ளது. சற்றும் எதிர்பாராத விதமாக அங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பாறைகள் உருண்டோடியது.


இந்த சம்பவத்தை தொலைவிலேயே கண்ட ஓட்டுநர் பேருந்தை நிலச்சரிவிற்கு தொலைவில் நிறுத்தியுள்ளார். இருந்தபோதிலும் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவை பார்த்து பயந்த பயணிகள் அனைவரும் பேருந்தின் ஜன்னல் வழியாகவும், வாசல் வழியாகவும் குதித்து வெளியேறினர். இதன் பின்னர் ஓட்டுநர் அந்த பேருந்தை பின்புறமாக இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து பாதுகாப்பான இடத்தில பேருந்தை நிறுத்தியுள்ளார். பேருந்து ஓட்டுனரின் இந்த செயலால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories