மூக்குத்தியில் பிட் வைக்க முடியும் என்றால் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாதா?" சீமான் காட்டம்

சென்னை தாம்பரத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மே 5) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "வசதி படைத்த மாணவர்கள் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு படிக்கின்றனர். கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்?. தேர்வு அறைக்கு மூக்குத்தி மூலம் எப்படி பிட் கொண்டு செல்ல முடியும்? அப்படி என்றால் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாதா?"
நீட் தேர்வுக்காக பல இடங்களில் சோதனை செய்கிறீர்கள். ஆனால், பஹல்காமில் சோதனை நடத்த முடியவில்லையா? பட்டனில் பிட் வைக்க முடியுமா? அதை ஏன் அகற்றச் சொல்கிறீர்கள்? வடஇந்தியாவில் மாணவர்கள் புத்தகத்தை வைத்தே நீட் தேர்வு எழுதுகிறார்கள். என்னிடம் அதற்கு ஆதாரம் இருக்கிறது"
என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
Tags : மூக்குத்தியில் பிட் வைக்க முடியும் என்றால் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாதா?" சீமான் காட்டம்