ஒமைக்ரான் பாதிப்பு 1,892 ஆக உயர்வு

by Admin / 04-01-2022 12:16:37pm
 ஒமைக்ரான் பாதிப்பு 1,892 ஆக உயர்வு

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் 568 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 11-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது.
 
130 நாடுகளை ஆக்கிரமித்துள்ள ஒமைக்ரான் இந்தியாவில் 23 மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மாலை வரை இந்தியாவில் 1,747 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இன்று அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 1,892 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதில் வழக்கம்போல மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் 568 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தபடியாக டெல்லியில் 382 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறது.

கேரளாவில் 185 பேருக்கும், ராஜஸ்தானில் 174 பேருக்கும், குஜராத்தில் 152 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6-வது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் 121 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இவர்களில் 100 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். மற்றவர்களும் குணம் அடைந்து வருகிறார்கள். அகில இந்திய அளவில் 766 பேர் குணம் அடைந்து விட்டனர். 1,126 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 

Tags :

Share via