காவிரிக்காக நடிகர்கள் ஏன் குரல்கொடுக்கவில்லை: ஈஸ்வரன் கேள்வி

by Staff / 13-10-2023 03:26:53pm
காவிரிக்காக நடிகர்கள் ஏன் குரல்கொடுக்கவில்லை: ஈஸ்வரன் கேள்வி

காவிரி நீருக்காக நடிகர், நடிகைகள் ஏன் குரல் கொடுக்கவில்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவரும், திருச்செங்கோடு எம்எல்ஏ-வுமான ஈஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்த அவரது அறிக்கையில், 'தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் நடிகர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் விஜய், ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் மௌனமாக இருக்கின்றனர். தமிழக நடிகர்கள் தங்கள் படம் கர்நாடகாவில் ஓட வேண்டும் என்ற குறிக்கோளுடன் மட்டும் இருக்கிறார்களே தவிர தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடக் கோரி கோரிக்கை விடுக்கவில்லை' என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo