இந்த அநீதியும் விரைவில் நீக்கப்பட வேண்டும்: கமல்ஹாசன்
ஓபிசி பட்டியலில் தயாரிக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது தெரிந்ததே. முதலில் மக்களவையிலும் அதன்பின்னர் மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஓபிசி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல மாநில முதல்வர்களும்,அரசியல் தலைவர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது கூட்டாட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் ஓபிசி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு கிடைத்த அனுமதி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளனர்
ஆனால் அதே நேரத்தில் இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு என்பதையும் அனைவரும் எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 69 சதவீதம் வரை இட ஒதுக்கீட்டில் ஓபிசி பட்டியலை தயாரிக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது
இந்த நிலையில் இதுகுறித்து கமல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: OBC பட்டியலை தயாரிக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேறி இருக்கிறது. சமூகநீதிப் பயணத்தில் இது ஒரு மைல்கல். இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு எனும் அநீதியும் விரைவில் நீக்கப்பட வேண்டும்.
Tags :