அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

by Editor / 17-01-2024 10:05:04am
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 வது ஜல்லிக்கட்டாக மதுரை அலங்கால்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக துவங்கியது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி அதிகாலை 6:00 மணி முதல் மாடுபிடி வீரர்களின் மருத்துவ பரிசோதனைக்குப்பின்னர்  துவங்கப்பட்டது.

இந்த மருத்துவ பரிசோதனையில் மாடுபிடி வீரர்களை 130 மேற்பட்ட மருத்துவ குழுவினர் மருத்துவர் செவிலியர் உதவியாளர் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக 1784 பதிவுற்ற நிலையில் அதில் ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 800 மாடுபிடி வீரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவருமே மருத்துவ பரிசோதனை செய்யப்படும் போது மது அருந்தி உள்ளார்களா அல்லது 18 வயதிற்கு கீழ் உள்ளார்களா , அதிக எடை கொண்டவர்கள் ஏதேனும் போதை வஸ்துக்கள் பயன்படுத்தி இருந்தால் அல்லது மூச்சு திணறல் போன்றவை இருந்தால் அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில்அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த மருத்துவ பரிசோதனை மூலம் தெரிவிக்கப்பட்டு சரியாக உள்ள மாடுபிடி வீரர்கள் தகுதி அடிப்படையில் உள்ள அனைத்து மாடுபிடி வீரர்களும் ஐம்பது பேர் கொண்ட குழுவாக சுமார் 10 சுற்றுகள் நடைபெறும் போட்டியில் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள்.

இதில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு முதல் பரிசு கார் ,பைக் மற்றும் பீரோ,  கட்டில் டிவி, சைக்கிள், தங்க காசு போன்ற பரிசுகள் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா குழுவினரால் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்படும்.

இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
 

 

Tags : அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Share via