விஜய் குறித்து அவதூறு பேச்சு.. ரஜினி தரப்பு கண்டனம்

by Staff / 11-02-2025 04:34:29pm
விஜய் குறித்து அவதூறு பேச்சு.. ரஜினி தரப்பு கண்டனம்

ரஜினி ரசிகர்கள் சிலர் விஜய் குறித்து அவதூறாக எக்ஸ் வலைத்தளத்தில் பேசியிருந்த ஆடியோ வைரலாக பரவிய நிலையில், ரஜினி தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ரஜினிகாந்தின் ரசிகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் நடிகர் விஜய்க்கு எதிராக வெளியிட்ட கருத்துகள் கண்டிக்கத்தக்கது. உண்மையான ரஜினி ரசிகர்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள். திரைப்படம் என்பது மக்களை ஒன்றிணைப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர, அது பிளவை ஏற்படுத்துவதற்காக அல்ல என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via