கஞ்சா போதையில் வீடு புகுந்து திருட முயற்சி; கூச்சலிட்டதால் வெட்டி விட்டு தப்பியொட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் அருகே ராணுவ வீரர் வீட்டில் கஞ்சா போதையில் கொள்ளை முயற்சி. வீட்டில் உள்ளவர்கள் கூச்சலிட்டதால் கத்தியால் அறுத்துவிட்டு மர்மநபர்கள் தப்பியொட்டம். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்கள். நெமிலி போலீசாரின் சமரசத்தால் மறியல் கைவிடப்பட்டது.
நெமிலி வட்டம் பனப்பாக்கம் அடுத்த அண்ணாமலை நகரில் உள்ள ராஜேந்திரன் வயது (41). இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் மனைவி அலமேலு மற்றும் மகன் சோனு ஆகியோர் உள்ள நிலையில் இன்று காலை முகமூடி அணிந்து வந்த மர்மநபர் வீட்டில் இருந்த மகனின் கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை கொடுக்குமாறு மிரட்டி உள்ளான்.
இந்நிலையில் இருவரும் கூச்சலிட்டதால் மகனின் கையை கத்தியால் வெட்டிவிட்டு, அலமேலுவையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறுகின்றனர். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பனப்பாக்கம் To ஓச்சேரி சாலையில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், தொடர்ச்சியாக கஞ்சா போதையில் இந்த பகுதியில் வாலிபர்கள் அச்சுறுத்தல் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த நெமிலி காவல்துறையினர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை மறியலால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து தடைப்பட்டது.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது...
Tags : கஞ்சா போதையில் வீடு புகுந்து திருட முயற்சி; கூச்சலிட்டதால் வெட்டி விட்டு தப்பியொட்டம்.