சென்னையில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கைது.
சென்னையில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மோசடியின் பின்னணியில் சீனர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியிடம், மும்பை போலீஸ் என கூறி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி செய்து ரூ.88 லட்சம் அபகரிக்கப்பட்டது. இந்த வழக்கில் அண்மையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் செப்டம்பர் 4ஆம் தேதி ஒரே நாளில் ரூ.3.82 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.
Tags : சென்னையில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கைது.