புதிய உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம்- முதலமைச்சர் மு .க .ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்த அரசு ஊழியர்-ஆசிரியர்சங்கத்தினர்.
: மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்..-
.
.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் பங்களிப்பு ஓய்வூதியம் என்கிற அடிப்படையில் செயல்பட்டு வந்த திட்டத்தினால் ஓய்வு பெற்ற 48 ஆயிரம் அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் மாதம் குறைந்தபட்சம் ஓய்வூதியம்கூட பெற முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருந்த பொழுது.. பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு இணையானபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட த்தை தமிழக முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.
.மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதி அளிக்கப்பட்ட ஓய்வு ஊதியமாக வழங்கப்படும். பணியாளர்களின் 10% பங்களிப்போடு ஓய்வூதிய நிதியத்திற்கு தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.. 50 சதவீதம் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெரும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். பணிக்காலத்தில் இறந்துவிட்டால் அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் ..அரசு அலுவலர்கள் ஓய்வுறும் போது பனிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் அவர் அவரின் பனிக்காலத்திற்கு ஏற்ப 25 லட்ச ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் ..புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்ட பின் ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி பணி காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வு ஊதியம் வழங்கப்படும் .பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து புதிய தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்..அரசு புதிய உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குவதன் மூலமாக 11,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். தாங்கள் எதிர்பார்த்ததை விட அரசு சொன்னதைச் செய்திருக்கிறது என்றும் கலைஞரின் வாரிசு என்பதை தளபதி நிரூபித்து இருக்கிறார்கள் என்றும் ஜனவரி 6ஆம் தேதி நடத்தயிருந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவித்துள்ளனர். அத்துடன் மார்ச் மாதத்தில் தேர்தலில் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே இந்த நிதியாண்டில் புதிய உறுதிப்படுத்த ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர்அமல் படுத்துவார் என்கிற நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்தனர். தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்து நெகிழ்ந்த அரசு ஊழியர் சங்கத்தினரான ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்பினர்.
Tags :



















