காமராஜரின் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மரியாதை
கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னை நங்கநல்லூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ், தா.மோ. அன்பரசன், கீதா ஜீவன், சென்னை மேயர் பிரியா ராஜன், அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு புத்தகம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
Tags :



















