குற்றாலத்தில் தற்காலிக சீசன் கடைகளில் காட்டுதீ ..சிலிண்டர் வெடித்ததால் கடைகள் எரிந்து நாசம் 

by Editor / 25-08-2023 09:42:33pm
குற்றாலத்தில் தற்காலிக சீசன் கடைகளில் காட்டுதீ ..சிலிண்டர் வெடித்ததால் கடைகள் எரிந்து நாசம் 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசனை முன்னிட்டு குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்திற்கு சொந்தமான பகுதிகளில் குற்றால சீசனை முன்னிட்டு ஏராளமான கடைகள் தனியார்களுக்கு தரை வாடகை ஏலம் விடப்பட்டன. இதில் பலர் தரைதளங்களை சதுர அடிகணக்கில்  வாடகைக்கு எடுத்து அதனை இரண்டாவது மற்றும் மூன்றாவது நபர்களுக்கு அதிக அளவில் கூடுதல் விலைக்கு கடைகளை வாடகைக்கு கொடுத்து நிலையில் 50க்கும் மேற்பட்ட தரைத்தளகடைகள் தனியாருக்கு  ஏலம் விட்ட நிலையில்   பலர் ஏலம் எடுத்து அதனை வெளியூரை சேர்ந்தவர்களுக்கு சீசன் கடைகள் அமைக்க ஏலமெடுத்த தொகையைவிட அதிக வாடகைக்கு கைமாற்றி தனியாக  ஏலம் விட்டுள்ளனர். அதில் ஏகப்பட்டவர்கள் பல லட்ச ரூபாய் கொடுத்து கடைகளை ஏலமெடுத்தவர்களிடமே ஏலம்  எடுத்து நடத்தி வந்த நிலையில் இன்று மதியம் சுமார் 2 1/4 மணி அளவில் ஐயப்பன் என்பவரது டீக்கடையில் சிலிண்டர் வெடித்து தீப்பற்றி உள்ளது.. இதன் தொடர்ச்சியாக அருகில் உள்ள அனைத்து கடைகளுக்கும் தீ வேகமாக பரவியதை தொடர்ந்து அனைத்து கடைகளும் தற்காலிக கடைகள் என்பதால் துணிக்கடைகள்,பிளாஸ்டிக்கடைகள்,பாத்திரக்கடைகள்,மழைக்கால கோட்,ஜெர்க்கின் கடைகள்,விளையாட்டுப்பொருட்கள் கடைகள்,அல்வாக்கடை,  உள்ளிட்ட  அனைத்து கடைகளுக்கும் தீ வேகமாக பரவி இதில் இருபதுக்கு மேற்பட்ட கடைகள் சேதமடைந்தன. சுமார் தீயின் காரணமாக பயங்கர சப்தத்தோடு  சிலிண்டர்கள் வெடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உடனடியாக விரைந்து வந்து தீய அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள இரண்டு பச்சை மரங்களும் முழுமையாக தீப்பற்றி எரிந்து தீயில் நாசமாகி உள்ளது. மேலும் கடைக்குள் யாரும் இருக்கிறார்களா இறந்திருக்கிறார்களா பலியாகி உள்ளார்களா என்கின்ற விவரம் தெரியவில்லை இருப்பினும் தீயணைக்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தினுடைய அதிகாரிகளின் மெத்தனப் போக்கின் காரணமாக கோவிலுக்கு செல்லும் நடைபாதைகளில் ஏராளமான கடைகள் அமைக்க அனுமதி கொடுத்ததே இந்த தீ விபத்துக்கான காரணம் என்கின்ற குற்றச்சாட்டும் பக்தர்கள் மத்தியிலிருந்து எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் இன்று வெள்ளிக்கிழமையென்பதாலும்,அருவிகளில் நீர்வரத்து குறைவாக வருவதாலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டமில்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.உடனடியாக தகவல் அறிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் துறை.ரவிசந்திரன்.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன்,பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்,சட்டமன்ற உறுப்பினர்கள்கிருஷ்ணமுரளி என்ற  குட்டியப்பா,பழனிநாடார் உள்ளிட்டவர்கள் வந்து பார்வையிட்டு சென்றனர். மாவட்ட நிர்வாகம் தனி கவனம் எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற வேண்டுகோள் எழுப்பப்பட்டுள்ளது.இந்த தீவிபத்தில் ஏராளமான சிறிய வியாபாரிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,அனைத்து கடைகளுக்கும் முறையாக அனுமதிகளை பேரூராட்சியில் இருந்து பெறவில்லையென்றும் கூறப்படுகிறது.குற்றாலத்தை பொறுத்தவரை பணம் கொழிக்கும் சுற்றுலாத்தலமாக மட்டுமே பார்க்கப்ப்டுகிறது.

 

Tags : குற்றாலத்தில் தற்காலிக சீசன் கடைகளில் காட்டுதீ ..

Share via