கேரளாவில் பயங்கர விபத்து - தமிழ் பெண்கள் 9 பேர் பலி

by Editor / 25-08-2023 09:23:21pm
 கேரளாவில் பயங்கர விபத்து - தமிழ் பெண்கள் 9 பேர் பலி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜீப் கவிழ்ந்து 9 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் பெண்கள் ஜீப்பில் சென்று கொண்டிருக்கும் போது கன்னூத்மலை அருகே உள்ள பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் 9  பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இவர்கள் இலங்கையில் இருந்து 1960 ஆம் ஆண்டுவாக்கில் கேரளாவுக்கு வந்த தமிழர்குடும்பத்தினர் ஆவார்கள். பாலியான 9 பேரில்  ராணி, சாந்தா, சின்னம்மா, ராபியா, லீலா, ஷாஜா ஆகியோரது உடல்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. 

கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று , காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட விஷயங்களை ஒருங்கிணைத்து மற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், வயநாடு எம்.பி.யான  ராகுல் காந்தி இது குறித்து தனது வலைத்தள பதிவில், ”வயநாட்டின் மானந்தவாடியில் பல தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த சோகமான ஜீப் விபத்துக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்; மாவட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன்;என தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்த சோக நிகழ்வுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் தன்னுடைய இரங்கலை வெளியிட்டுள்ளார்.மேலும், 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :  கேரளாவில் பயங்கர விபத்து - தமிழ் பெண்கள் 9 பேர் பலி

Share via
Logo