என் அப்பா உண்மையான "விவசாயி"-நல்லாண்டியின் மகள்  மொக்கத்தாய் உருக்கம்.

by Editor / 25-08-2023 09:08:00pm
என் அப்பா உண்மையான

மத்திய அரசின் 69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படத்திற்கும், சிறந்த நடிப்புக்கும் என இரண்டு விருதுகளை தமிழ் படமான கடைசி விவசாயி பெற்றுள்ளது என்ற படம் பெற்றுள்ளது.2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை கடைசி விவசாயி திரைப்படம் வென்று இருக்கு நிலையில் இதையெல்லாம் பார்க்காமலேயே இந்த மண்ணை விட்டு மறைந்துவிட்டார் படத்தின் நாயகனான பெரியவர் நல்லாண்டி.

 கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டன. இந்த விருது பட்டியலில் 2021-ஆம் ஆண்டுக்கு முன்பு தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் இடம்பெறவுள்ளன.

 தற்போது இந்தப் படத்துக்கு சிறந்த நடனம், சிறந்த சண்டைபயிற்சி, சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள  விளாம்பட்டியைச் சேர்ந்த இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்த பெரியவர் நல்லாண்டிக்கு  சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் கடைசி விவசாயி படத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பார்க்க நல்லாண்டி உயிரோடு இல்லை என்பது தான் மிகப்பெரிய வேதனையான நிகழ்வு.

இப்படி ஒரு நிலையில் தனது தந்தைக்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறித்து பேசியுள்ள பெரியவர் நல்லாண்டியின் மகள் ‘பெருங்காமநல்லூரில் வசிக்கும் மொக்கத்தாய் கூறுகையில் தன்னுடைய அப்பா 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்றிருந்தார்.

அவரை அந்த படத்தில் போலீசாக நடித்த செல்வம் தம்பி தான் கூட்டிக்கொண்டு போனார். மணிகண்டன் தம்பி உட்பட அனைவருமே நன்றாக பார்த்துக் கொண்டார்கள். எங்களுடைய அப்பா அழியாத சொத்து.

என் அப்பா உண்மையான விவசாயி விவசாயத்திற்காக உழைத்தவர். இந்த விருது கிடைத்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.அவர் வாழ்ந்த வாழ்க்கையை  எண்ணி எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

 

Tags : உண்மையான "விவசாயி"-நல்லாண்டி

Share via