கலைஞர் நூற்றாண்டு நூலகம் - இன்று திறப்பு விழா

மதுரை மாநகர், புதுநத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் இன்று நடைபெறவுள்ளது. ரூ.215 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். 3.56 ஏக்கர் பரப்பளவில், 2 லட்சத்து 13 ஆயிரம் சதுர அடியில் கீழ்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் நூலகம் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 11.20 மணிக்கு மதுரை வரும் அவர், புதுநத்தம் பகுதியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்க உள்ளார்.
Tags :