முதலையை சிதறி ஓட வைத்த தாய் யானை

by Staff / 14-04-2023 01:10:40pm
முதலையை சிதறி ஓட வைத்த தாய் யானை

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் தேசிய பூங்காவில் முதலையிடம் சிக்கிய குட்டி யானை, தாய் யானை போராடி காப்பாற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ, குட்டை ஒன்றில் தேங்கியிருக்கும் நீரில் குட்டி யானை விளையாடும் நிலையில், அதனை அங்கிருந்த முதலை கடிக்கப் பாய்கிறது. இதனை கண்டு கோபமடைந்த தாய் யானை அந்த முதலையை ஓங்கி மிதித்து, அங்கிருந்து விரட்டியடித்தது. யானை தாக்குதலில் இருந்து தப்பித்து, முதலை ஓடி ஒளிந்த காட்சி வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via