தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு.
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு. சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பி. ஆகாஷ் மாற்றப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியாளராக நிஷாந்த் கிருஷ்ணாவும் ஸ்ரேயா சிங் சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர். ஜி. பிரகாஷ் வருவாய் நிர்வாக ஆணையராக கூடுதல் ஆணையாகவும் சந்திப் நந்தூரி தொழில்துறை சிறப்பு செயலாளராகவும் எஸ் சுவர்ணா, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை செயலாளராகவும் சந்தியா வேணுகோபால் சர்மா திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலாளராகவும் ஜே குமரகுருபரன் வணிகவரி பதிவு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை செயலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags :


















