ஈரான் -அமெரிக்கா இடையிலான மோதலை முடி கொண்டு வருவதில் பாகிஸ்தான் ஒரு சமாதான திட்டத்தை முன் வைத்துள்ளது.
ஈரான் -அமெரிக்கா இடையிலான மோதலை முடி கொண்டு வருவதில் பாகிஸ்தான் ஒரு சமாதான திட்டத்தை முன் வைத்துள்ளது. பாகிஸ்தான் முன்வைத்துள்ள இந்த திட்டம் இரண்டு கட்டங்களைக் கொண்டது முதலாவது உடனடி போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் பிறப்பது இரண்டாவது அடுத்த 15 முதல் 20 நாட்களுக்குள் ஒரு நிரந்தர அமைதி உடன்படிக்கையை ஏற்றுவது. அமெரிக்காவின் போர் நிறுத்த நிபந்தனைகளை நிராகரித்த ஈரான் பாகிஸ்தான் வழியாக 10 அம்சங்கள் கொண்ட தனது சொந்த முன்மொழிவை அனுப்பி உள்ளது இதில் பிராந்திய மோதல்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். ஈரான் மீதான அனைத்து தடைகளும் நீக்கப்பட வேண்டும் .ஈரான் மீதான தாக்குதல்கள் மீண்டும் நடக்காது என்பதற்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.ஈரானின் இந்த முன்மொழிவை ஒரு முக்கியமான நிலைப்பாடு என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் ் குறிப்பிட்டுள்ளதோடு போதுமானதாக இல்லை என்றும் கூறி நிராகரித்துள்ளார். ஹார்முஸ் நீர் இணையை உடனடியாக திறக்க தவறினால், ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க எச்சரிக்கை விடுத்ததுள்ளதோடு ஏழு அல்லது எட்டாம் தேதிக்குள் இந்த கெடு முடிவதற்குள் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் செவ்வாய் இரவு எட்டு மணிக்கு பின்பு விளைவுகள் வேறு விதமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது .இந்த அமைதி முயற்சியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அமெரிக்க மற்றும் ஈரான் தரப்புடன் தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
Tags :



















