தங்கம் விலை வீழ்ச்சி

by Editor / 18-09-2021 12:55:01pm
தங்கம் விலை வீழ்ச்சி

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 400 வீழ்ச்சி அடைந்ததால் தங்கம் வாங்கும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் இரண்டும், சவரனுக்கு ரூபாய் 16ம் குறைந்துள்ளது .

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4371.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 ரூபாய் குறைந்து ரூபாய் 4369.00என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 34968.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 16 குறைந்து ரூபாய் 34952.00 என விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4733.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 37864.00எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 2ம், ஒரு சவரன் ரூபாய் 16ம் குறைந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது நேற்று வெள்ளியின் விலை ரூ. 65.90 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 70 காசுகள் குறைந்து ரூபாய் 64.20 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 64200.00 என விற்பனையாகி வருகிறது .

 

Tags :

Share via