டெல்லி சட்டமன்ற வளாகத்தில் இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு அதிவேகமாக உள்ளே நுழைந்தது முகமூடி அணிந்திருந்த ஓட்டுனர்

by Admin / 07-04-2026 09:12:22am
டெல்லி சட்டமன்ற வளாகத்தில் இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு அதிவேகமாக உள்ளே நுழைந்தது முகமூடி அணிந்திருந்த ஓட்டுனர்

டெல்லி சட்டமன்ற வளாகத்தில் நேற்று மதியம் 2 மணி அளவில் உத்தரப்பிரதேசம் மாநில பதிவு எண் கொண்ட ஒரு வெள்ளை நிற டாட்டா சீரா கார் சட்டமன்றத்தில் இரண்டாவது நுழைவு வாயிலில் இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு அதிவேகமாக உள்ளே நுழைந்தது முகமூடி அணிந்திருந்த ஓட்டுனர் சபாநாயகர் அலுவலக முகப்பு அருகே காரை நிறுத்தி ஒரு மலர்கொத்தை அங்கிருந்த சபாநாயகர் கார் மீது வைத்து விட்டு தப்பி சென்றார். .இந்த சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள் வட டெல்லியில் ரூப் நகர் பகுதியில் காரை ஓட்டிச் சென்ற பிலிப்பிட்டை சேர்ந்த சரத்ஜித் சிங் அவருடன் இருந்த இரு வரை காவல்துறையினர் கைது செய்தனர். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் அந்த மலர் கொச்சை பரிசோதித்ததில் அதில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இந்த செயலுக்கான துல்லியமான நோக்கம் என்னும் கண்டறியப்படவில்லை எனினும் சட்டமன்றத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் பின்னணியில் இந்த பாதுகாப்பு குறைபாடு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்.

 

Tags :

Share via

More stories

Logo