அரசியலமைப்புக்கு எதிராக மோடி அரசு திருமாவளவன்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவதாக விசிக தலைவர் எம்.பி.,திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் பேசிய அவர், "ஒரே மதம் தான் இந்தியாவை ஆள வேண்டும் என்ற நோக்கில் சமூகம். கல்வி, பொருளாதாரம், அரசியல் ரீதியாக மக்களை மோடியின் பாஜக அரசு பிளவுபடுத்துகிறது. மாநில உரிமைகளை பறித்து, ஒற்றை மொழி, மத ஆதிக்க தேசியவாதத்தை நிறுவ முயற்சிக்கிறது" என்று குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
Tags :