பா.ஜ.க. மாவட்டத் தலைவர்களுக்கு கார் பரிசு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 4 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தது.
பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட எம் ஆர். காந்தி- நாகர்கோயில் சட்டமன்றத் தொகுதியிலும், வானதி சீனிவாசன் - கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் - திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலும், சரஸ்வதி - மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் சென்றனர். இதனால் இவர்கள் வெற்றி பெற்ற மாவட்டங்களான ஈரோடு (தெற்கு), நெல்லை, கன்னியாகுமரி, கோவை (நகர்) ஆகிய நான்கு மாவட்ட தலைவர்களுக்கு (22/08/2021) சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புதிய இனோவா காரை பரிசாக வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.
தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற பா.ஜ.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும் மாவட்ட தலைவர்களுக்கு பா.ஜ.க. சார்பில் இனோவா கார் வழங்கப்படும் என்று எல்.முருகன் தெரிவித்திருந்தார்
Tags :