நான் தரம் தாழ்ந்து போகவில்லை.ஓ.பி.எஸ். அணிக்கு செல்லமாட்டேன்: கே.பி.முனுசாமி

by Staff / 13-10-2022 03:21:53pm
நான் தரம் தாழ்ந்து போகவில்லை.ஓ.பி.எஸ். அணிக்கு செல்லமாட்டேன்: கே.பி.முனுசாமி

கடந்த 2 வாரங்களாக இ.பி.எஸ். வீட்டுப் பக்கம் கே.பி.முனுசாமி எட்டிப்பார்க்க கூட இல்லை. சொந்த ஊரில் இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பது கட்சியினர் மத்தியில் வெளிப்படையாக தெரிந்தது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கே.பி.முனுசாமியை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக இறங்கி உள்ளது. அவர் விரைவில் ஓ.பி.எஸ். அணிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதுபற்றி கே.பி.முனுசாமியை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் வைரஸ் காய்ச்சல் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். என்னைப்பற்றி தவறாக வதந்தி பரப்பப்படுகிறது. எப்போதும் அணி மாறி கொண்டிருக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போகவில்லை. நான் ஓ.பி.எஸ். அணிக்கு செல்ல மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via