அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்...

by Staff / 22-11-2023 01:58:39pm
அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்...

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 26ஆல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதையொட்டி, இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில், வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும். இன்று மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதே போல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via