அமைச்சர் எ.வ.வேலு கல்லூரியில் மீண்டும் ரெய்டு

திமுகவின் முக்கிய அமைச்சர்களுக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை அவப்போது தொடர்ந்து ரெய்டுகளில் ஈடுபட்டு வருகிறது. அப்படி நடத்திய ரெய்டில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி சிக்கி சிறையில் உள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவின் சீனியர் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஐ.டி. சோதனை நடத்தினர். அதில் சில இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று மீண்டும், திருவண்ணாமலையில் உள்ள அருணை கல்லூரி உள்ளிட்ட இடங்களில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்படுள்ளது.
Tags :