கங்கை மற்றும் அதன் துணை நதிகளை தூய்மைப்படுத்த 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

by Editor / 17-08-2022 03:45:06pm
கங்கை மற்றும் அதன் துணை நதிகளை தூய்மைப்படுத்த 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

கங்கை மற்றும் அதன் துணை நதிகளில் தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார் .நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்திய மக்கள் தொகை புவியியல் பரந்த தன்மை நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை கருத்திற்கொண்டு நீர் மற்றும் பிற இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டியதும் அவசியம் என்று கூறினார். மேலும் கங்கையை சுத்தப்படுத்த ஏராளமான உள்கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளதாகவும் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories