ஈரோடு மாவட்டத்தில் வேளாண் கண்காட்சி.. CM தொடங்கி வைக்கிறார்

ஈரோடு மாவட்டத்தில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், உயர் ரக கால்நடைகள் வளர்ப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு வரும் 11, 12ஆம் தேதிகளில் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் உழவர்களுக்கு திட்டப்பலன்கள் வழங்கப்படவுள்ளது என கூறியுள்ளார்.
Tags :