கஞ்சா குறித்து விழிப்புணர்வு நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வேதனை

by Editor / 01-09-2022 09:23:16am
கஞ்சா குறித்து விழிப்புணர்வு நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது  மத்திய இணை அமைச்சர் எல் முருகன்  வேதனை

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி
அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் செல்லும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறவில்லை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையாக இருந்தாலும் அவர் தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் முதல்வர் என்ற முறையில் வாழ்த்து கூறி இருக்க வேண்டும்,தமிழகத்தில் 8 வழி சாலையை கண்மூடித்தனமாக எதிர்த்தது திராவிட முன்னேற்றக் கழகம்,தற்போது 8 வழி சாலையை திமுக ஆதரிப்பது வரவேற்க கூடியது. 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது ஜெய்லர்,  போலீஸ்காரர்களுக்கும் பாதுகாப்பு இல்லை பெண்கள் நகை அணிந்து தைரியமாக வெளியில் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.மேலும் கஞ்சா தமிழகம் முழுவதும் பறந்து விரிந்து விரிந்து உள்ளது.  கஞ்சாவை குறித்து விழிப்புணர்வு நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது என வேதனை தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo