உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா- மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா மாறி உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்தியா உலகின் அரிசி உற்பத்தியில் முதலிய இடத்தை நோக்கி நகர்ந்து இருப்பதாக அமெரிக்க வேளாண்மை துறையின் தரவுகளின் படி இந்தியா அரிசி உற்பத்தியில் 152 மில்லியன் மெட்ரிக் தன்னை எட்டி உள்ளது. இது சீனாவின் 146 மில்லியன் மெட்ரிக் சென்னை விட அதிகம். இந்த சாதனை இந்தியாவின் பொருளாதாரத்தில் அரிசியின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது. மேலும் நாட்டின் விவசாய ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டது .பசுமை புரட்சி போன்ற வரலாற்று ரீதியான முன்னேற்றங்கள் மற்றும் தைவான் வழங்கிய முக்கிய குள்ள அரிசி வகைகளின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.. இந்தியா ,சீனாவை மிஞ்சி .உலகின் முன்னணி அரிசி உற்பத்தி செய்யும் நாடாக உயர்ந்துள்ளது . அரிசி இந்திய பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கமாகும் 2024- 25 நிதியை ஆண்டில் ,இந்தியாவில் விவசாய ஏற்றுமதி 4 50, 840 கோடி என்ற சாதனையை எட்டியது. இதில் அரிசியின் பங்கு 24 சதவீதமாக உயர்ந்துள்ளது..பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத ஏற்றுமதி மூலம் ஒரே ஆண்டில் சுமார் 105, 720 கோடி அந்நியவருவாய் வந்துள்ளது. இது தேசிய வருவாயில் அரிசியின் பங்கை வெளிப்படுத்துகிறது. சுதந்திர இந்தியாவிற்கு பிறகு அரிசி உற்பத்தியில் ஆண்டுக்கு 20.58 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து தற்போது 152 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்து அரிசியில் ஒரு புரட்சியை இந்தியா ஏற்படுத்தியுள்ளது.
Tags :



















