8 வயது சிறுவனின் உயிரை பறித்த கேக்

உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஜான்சா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சஜோய் கிராமத்தில் வசிக்கும் தீரஜ் ஸ்ரீவஸ்தவாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனின் பிறந்தநாள் திங்கள்கிழமை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்பொழுது ஒரு துண்டு கேக்கை இளைய மகன் பிரஞ்சல் (8) சாப்பிட்டுள்ளான். ஆனால் கேக் துண்டு தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து சிறுவனை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 2 நாட்கள் சிகிச்சையில் இருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சில தினங்களுக்கு முன் மூத்த மகனின் பிறந்தநாளை கொண்டாடிய குடும்பம், தற்போது இளைய மகன் இறந்ததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
Tags :