நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது நடவடிக்கை இருக்காது- என்.ஐ.ஏ

by Staff / 02-02-2024 05:09:57pm
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது நடவடிக்கை இருக்காது- என்.ஐ.ஏ

துப்பாக்கி தயாரிப்பது பற்றி யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக நா.த.க.வை சேர்ந்த 2 பட்டதாரிகள் மீது என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளது. பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கின் அடிப்படையில் நா.த.க. நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விசாரணையில், நிர்வாகிக்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை எடுப்போம்; கைது நடவடிக்கை இருக்காது என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. நிர்வாகிகள் ஆஜராக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories