OBC இடஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

by Editor / 29-07-2025 02:10:48pm
OBC இடஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27% OBC இட ஒதுக்கீட்டால் கடந்த 4 ஆண்டுகளில் 20,088 மருத்துவ இடங்களை பெற்று OBC மாணவர்கள் பலன் பெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "சமூகநீதிக்கான இந்த அரசியலையும் போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிப்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via