பள்ளி சிறுவர்களிடம் ஜாதிய வன்மத்தோடு பேசிய பெட்டிக்கடைக்காரர் கைது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் ஒரு பிரிவை சேர்ந்த பட்டியல் இன குழந்தைகளுக்கு பொருள்கள் வழங்குவதில்லை என்பது போன்ற வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதன் காரணமாக அந்த கிராமமான பாஞ்சாகுளம் கிராமத்தில் இரண்டு தரப்புக்கும் மோதல் எர்பட்டு விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்...
இந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பெயரில் பாஞ்சாகுளம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக இரு தரப்பினர்களுக்கு இடையே வன்முறை சம்பவங்கள் ஏதும் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணியில் போலீசார் அதிக அளவில்குவிக்கப்பட்டு உள்ளனர்
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருதரப்பினர்களுக்கு இடையே முன் விரதம் இருந்து வந்ததாகவும் அதன் தொடர்ச்சியாகவே இச்சம்பவம் நடை பெற்றதாகவும் கூறபடுகிறது.மேலும் கடைக்காரர் ஊர் கட்டுப்பாடு என்று கூறுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பறவையத்தைத்தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் அதிகபடுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவிக்கும் போது இந்த வழக்கு குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
Tags :